யாழ்.வடமராட்சி கிழக்கில் சங்கு சின்னத்திற்கு வலுக்கும் ஆதரவு..!
தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கில் அமோக ஆதரவுடன் வலுப்பெற்றுள்ளது.
சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேத்திரனை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கேவில், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி பகுதிகளில் இன்று (09.09.2024) பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொது வேட்பாளருக்கான தேவை
தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு வடமராட்சி கிழக்கு மக்கள் இடையே பெருகிவருவதால் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இளைஞர்கள் சிலர் தாமாகவே முன்வந்து பொதுவேட்பாளருக்கான ஆதரவு பிரசாரத்தை மேற்கொண்டு வருவதுடன் வீடு வீடாக சென்று தமிழ் பொது வேட்பாளருக்கான தேவையை வலியுறுத்தியதுடன் துண்டுப்பிரசுரங்களையும் கையளித்துள்ளனர்.

கேவில், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி பிரதேசங்களை சேர்ந்த அதிகளவான மக்கள் பொது வேட்பாளருக்கான நியாயப்பாடை உணர்ந்துள்ளதாக முன்னாள் மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கமலதாஸ் தெரிவித்துள்ளார்.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர், தாளையடி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri