யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம்
யாழ்ப்பாண(Jaffna) பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்கலைக்கழக பிரதான வாயிலை மூடி சத்தியாகிரக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது நேற்று(20.06.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பள நிலுவை மற்றும் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி 49 ஆவது நாளாக அகில இலங்கை ரீதியாக அனைத்து பல்கலைக் கழகங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சத்தியாக்கிரக போராட்டம்
இந் நிலையில் நேற்று முன் தினம் முதல் ஏனைய பல்கலைக் கழகங்களில் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்திலும் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் தங்கராஜா தமது கோரிக்கைகள் மற்றும் போராட்டம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |