யாழில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை!
யாழ். நகரில் ஊதுபத்தி வியாபாரம், சாத்திரம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள் மீது பொலிஸார் விசேட சோதனையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் உத்தரவுக்கமைய நேற்றயதினம்(05.08.2023) யாழ்மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலமையிலான குழு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம், அடையாள அட்டை இல்லை என்பதோடு, வேறுபகுதிகளில் இருந்து தவறான நோக்கங்களுக காக வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணை

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு ஆண்களும் கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அண்மைக்காலமாக யாழ். நகரில் இப்படியான வெளியிட வியாபாரிகளால் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்டோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam