யாழில் இடம்பெறவுள்ள ஓட்ட போட்டி தொடர்பில் வெளியான தகவல்
யாழ்ப்பாணத்தில் உடல், உள ஆரோக்கியத்தை பேணும் வகையிலான யாழ்ப்பாண ஓட்ட (Jaffna runners ) நிகழ்வில் வயது வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் பங்கு பற்ற முடியும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்யை தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "இந்த ஓட்ட நிகழ்வில் ஆண், பெண் இருபாலரும் பங்குபற்ற முடியும்.
ஓட்ட நிகழ்வானது எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கோட்டையிலிருந்து ஆரம்பமாகி, ஊர்காவற்றுறை பாதை வரை 5 கிலோமீற்றர்,10கிலோமீற்றர், 15 கிலோமீற்றர் என மூன்று பிரிவுகளாக இடம்பெறவுள்ளது.
வடக்கின் திட்டமிட்ட அபிவிருத்திகளில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடல்
பதிவினை மேற்கொள்ள..
இந்நிகழ்வில் பங்கு பற்றுபவர்களில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெறுவோர்க்கு பதக்கங்களும் பரிசல்களும் வழங்கி வைக்கப்படுவதோடு குறித்த தூரத்தை ஓடி முடிப்பவர்களுக்கும் பதக்கம் வழங்கப்படும்” எனவும் வைத்தியர் தெரிவித்தார்.

ஓட்ட நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் டீசெர்ட்களை பெற்றுக் கொள்வதற்கு சனிக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை ரில்கோ ஹோட்டலுக்கு வருகை தந்து பதிவினை மேற்கொண்டு தமக்கான இலக்கங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என இதன் ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரும் தனது 73 வயதில் உலகில் உள்ள ஆறு நாடுகளில் மரதன் ஓட்டங்களில் பங்கு பற்றி பதக்கத்தை வென்ற சாண் சுந்தரம் தெரிவித்தார்.
பதிவினை மேற்கொள்ளுபவர்கள், தமது அடையாள அட்டையைப்பதிவு செய்து இலக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும். ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணிக்கு கோட்டை அருகில் அனைவரும் ஒன்று கூடுமாறும் 6.00 மணிக்கு ஓட்ட நிகழ்வு ஆரம்பமாக உள்ளதால் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவினை மேற்கொள்ள கொள்பவர்கள் கீழுள்ள இணைப்பை கிளிக் செய்வதன் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe0ARjI_Tz0Zv6SjI_ZwGIS0SSdhpd1QuUETgfnp_nXUnjxaA/viewform
[