யாழ். காரைநகரில் ஒரு பகுதியினை முடக்க தீர்மானம்! அரச அதிபர்
காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமைப்படுத்துவதற்கு அனுமதி கோரி கோவிட் தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் ஜே47 கிராம சேவகர் பிரிவில் சயம்பு வீதி உள்ளடங்கலான ஒரு பகுதியில் அதிக அளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அந்த பகுதியினை முடக்குவதற்கு விண்ணப்பம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பம் அரசாங்க அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்டு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அப்பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இடர்கால நிவாரண உதவியும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam