யாழ். இராணுவத்தளபதி பொது மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்
கோவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் பயணம் கட்டுப்பாட்டை விதித்தாலும் மக்கள் வழங்கும் பூரண ஒத்துழைப்பின் மூலமே கோவிட் தொற்றினை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார் .
கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்.மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட கோவிட் தடுப்பு செயலணியின் தலைவர் என்ற ரீதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கோவிட் தொற்றினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளோம் என்பதை உறுதியாக கூற முடியும்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் கோவிட் முதலாவது அலை ,இரண்டாவது அலை, மூன்றாவது அலையின் போது பொதுமக்களை கோவிட் தொற்றிலிருந்து காப்பாற்றும் முகமாக இராணுவத்தினர் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இருந்தார்கள்.
அதேபோல தற்போதும் யாழ்ப்பாண மாவட்டத்தில் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக ராணுவத்தினரால் உரிய சகல பாதுகாப்பு முன்னெடுப்புகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் பூரண ஒத்துழைப்பினை வழங்குமிடத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்த முடியும் எனவும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்தார்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam