யாழில் மிதிவெடிகள் மீட்பு (Photo)
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கரத்தைப் பகுதியில் இருந்து மிதி வெடிகள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
சங்கரத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் காணியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டபோது சந்தேகத்துக்கிடமாக இரு பொருள்கள் இருப்பதனை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து உரிமையாளர், வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமாகக் காணப்பட்ட பொருள்களை அவதானித்து மிதிவெடிகள் என இனங்கண்டுள்ளனர்.
அதன் பின்னர் மிதிவெடிகளை செயலிழக்கச் செய்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
