யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!
யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது. நேற்று காலையிலிருந்து தற்போது வரை யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
யாழ்.நகரப் பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் ,மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும். வடபகுதியில் 100 மில்லி மீற்றர் எதிர்பார்க்கப்படுகிறது.காற்று 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதோடு கடல் தொழிலுக்குச் செல்வோர், தாழ் நிலப்பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam