யாழ். நகரிற்கு சர்வதேச ரீதியில் கிடைத்துள்ள அங்கீகாரம்
2026ஆம் ஆண்டிற்கான உலகின் இரண்டாவது சிறந்த பயண இடமாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது.
உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்லி பிளேனட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம், தனித்துவமான கலாசார பாரம்பரியத்தை கொண்ட இடமாக அமைந்துள்ளமையினால், உலகளாவிய ரீதியில் பலரின் ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
வெளியான பட்டியல்
கடந்த 22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள லோன்லி பிளானட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில், "சிறந்த பயணம் 2026" இன் இத்தாலிய மொழி பதிப்பில் இந்நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த தனித்துவமான அங்கீகாரம் இலங்கையின் சர்வதேச ஈர்ப்பை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், சுற்றுலாத் துறையில் சமூக அடிப்படையிலான சுற்றுலா அனுபவங்களை ஊக்குவிக்கவும் ஒரு சக்திவாய்ந்த சந்தைப்படுத்தல் கருவியாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குறித்த அறிக்கையின் படி, முதலாவது இடத்தில் தென் அமெரிக்காவின் பெரு நகரமும் மூன்றாவது இடத்தில் அமெரிக்காவின் மைனே நகரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
[MTX8XE8
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam