தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பாக யாழ். அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பாக வேறெந்த அமைப்புக்களும் தன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி நிறுவனங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்குவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டு மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதனை மறுத்து கருத்து தெரிவிக்கும் போதே மாவட்டச் செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தனியார் கல்வி நிறுவனங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்குவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டு மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை.

பிரத்தியேக கல்வி வகுப்புக்கள்
எந்த அமைப்பும் என்னுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை.
மேலும், தனியார் கல்வி நிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
நேற்று (09.07.2023) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக தனியார் கல்வி நிறுவனங்களிலும் பிரத்தியேக கல்வி வகுப்புக்களிலும் வாரத்தில் ஏழு நாட்களும் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால், பிள்ளைகளுக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் சாதக, பாதக நிலைமைகள் பற்றிய கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது "ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களிலும் தனியார் கல்வி நிறுவனங்களும் பிரத்தியேக வகுப்புக்களும் தரம் 9 வரையான மாணவர்களிற்கு வகுப்புக்களை நடத்துவதனை தவிர்த்தல்” எனும் தீர்மானம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam