வவுனியா சிறைச்சாலையில் யாழ். கைதி மீது மோசமான தாக்குதல்
வவுனியா(Vavuniya) சிறைச்சாலையில் கைதி மீது சிறைக்காவலர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சிறைக்காவலர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த கைதி யாழ்ப்பாணம், உடுவில் பகுதியை சேர்ந்த சிவபாலன் லக்சன் எனத் தெரியவந்துள்ளது.
பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க
படுகாயமடைந்த சிறைக் கைதி வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறைக் கைதியின் உறவினர்களால் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட கைதியின் உறவினர்கள், "இந்தச் சம்பவம் பற்றி தகவல் வெளியிடும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனச் சிறைக்காவலர்களால் கைதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
