இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்: பாராமுகமாக செயற்படும் அதிகாரிகள்
வட பகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் ஒரே பிரச்சினை இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் மாத்திரமே எனக் காட்டுவதற்கு அப்பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகள் செயற்படுவதால் கடற்றொழிலாளர்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாக வடபகுதி கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கடல் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும்.
அதனைவிடுத்து ஒரு கட்சியினால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் அழைத்து கடற்றொழிலாளர் பிரச்சினையை மழுங்கடித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை மாத்திரம்தான் வடக்கில் இருக்கிறது என்பது போல் காட்ட நினைப்பது கவலையளிக்கிறது.
இந்திய கடற்றொழிலாளர்கள் நாட்டுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவது மாத்திரமன்றி, உள்நாட்டு கடற்றொழிலாளர்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளும் காணப்படுப்படுகின்றது.
உள்ளூர் இழுவைமடி தடை செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சுருக்கு வலை குறைந்திருந்தாலும் 2014 ஜனவரி மாதம் அது அதிகரிக்கும். அதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
சட்டவிரோத கடலட்டைப் பண்ணை
யாழ்ப்பாணத்தில் 150 இற்கும் மேற்பட்ட சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் இருப்பது குறித்து அப்பகுதியிலுள்ள ஜனாதிபதியின் பிரதிநிதிக்குத் தெரியப்படுத்திய போதும் எவ்வித பயனும் இல்லை.
யாழ்ப்பாணத்தில் 700ற்கும் அதிகமான கடலட்டைப் பண்ணைகள் காணப்படுகின்றன. 150ற்கும் மேற்பட்ட அனுமதியற்ற பண்ணைகள் இருக்கின்றன.
பருத்தித்தீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கடலட்டைப் பண்ணையை அகற்றுமாறு கோரி மாகாண ஆளுநர் அலுவலகம், மாவட்ட செயலகம் வரை சென்று போராட்டம் நடத்தி, மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே இவ்வாறான எங்களுடைய பிரச்சினைகளை பிரஸ்தாபிக்காமல், வெறுமனே இந்திய கடற்றொழிலாளர்களால் தான் பாதிப்பு எனக் கூறுவதை ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
