புதிய தலைவராக சுமந்திரன் வந்தால் ஆபத்து: யோகேஸ்வரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஆ.சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக வந்தால் தமிழ் தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர்கள் குறித்து நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று(18.01.2024) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
புதிய தலைவருக்கான வேட்பாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர் தொடர்பில், கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு தேசியத்தினை நேசித்து இருக்கின்றனர் என்ற விடயம் தெளிவாக வெளிப்படும். ஏன் ஏன்றால் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.
தமிழ் தேசியத்தினை பாதுகாக்க வேண்டும். கடந்த காலத்தில் தமிழ் மக்களின் முக்கிய பேச்சாளராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஆ.சுமந்திரன் தமிழ் மக்கள் மீது வெளியீட்ட கருத்துக்கள் தேசியத்திற்கு ஏதிராக அமைந்து. இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்சி.சிறீதரன் அவர்களை ஆதரிப்பதாக தெளிவாக தெரியப்படுத்தியுள்ளனர்.
நான் வேட்பாளராக இருந்தாலும் எனது வாக்கினையும் அளிப்பேன். தமிழ் தேசியம் பாதுகாக்கும் வரை இறுதி வரை இருப்பேன். வடமாகாண மக்களும் அதனை உணர்ந்து தமிழ் தேசியத்தினை வெற்றி பெறச்செய்யவேண்டும். தமிழ் தேசியத்தினை பாதுகாக்காக பொருத்தமான தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவஞானமே ஆகும்.
எல்லோருக்கும் தெரியும் சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்த நாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.சுமந்திரன் அவர்கள் செல்லும் போது அவருக்கு புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து ஏதிராக கோசங்கள் எழுப்பபட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஆ.சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதியதலைவராக வந்தால் அது தமிழ்தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.
பொதுச்சபை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களை ஆதரிக்கும் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும் வேறு விதமாக தேர்தல் நடக்குமா என்பது ஏதிர்வரும் 21.01.2024 அன்று தெரியவரும்” என தெரிவித்துள்ளார்.

‘செத்துத் தொலை’ என்று கூறி ஈரான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: ஆசியா நோக்கி நகர்கின்றதா முழு அளவிலான யுத்தம்..!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 2 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
