தனது கஜானாவை நிரப்பவே டக்ளஸ் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சராக உள்ளார்

Jaffna Douglas Devananda Sri Lanka Sri Lanka Fisherman
By Theepan Oct 19, 2023 07:56 PM GMT
Report

தனது கஜானாவை நிரப்பவே டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து கடற்றொழில் அமைச்சராக செயற்படுகின்றார் என அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

விஜயகலா மகேஷ்வரனை விடுதலை செய்தது கொழும்பு பிரதான நீதவான்‌ நீதிமன்றம்

விஜயகலா மகேஷ்வரனை விடுதலை செய்தது கொழும்பு பிரதான நீதவான்‌ நீதிமன்றம்

கடற்றொழில் சம்மந்தமான சட்டம்

எமது நாட்டிலே கடற்றொழில் சம்மந்தமான சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கபட்டுள்ளது. குறித்த சட்ட திருத்த தொடர்பாக மக்களை ஏமாற்றும் விதமாக ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடற்றொழிலுக்கு சம்பந்தமில்லாதவர்கள் ஒரு கட்சியின் பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த சட்டம் 1996 ஆம் ஆண்டு பல கடற்றொழிலாளர்கள் நலன்களை முன்வைத்த பொழுதிலும் அதனையெல்லாம் புறக்கணித்து கொண்டு வரப்பட்டது தொழிலாளர்களுக்கு பாரிய ஏமாற்றத்தை கொடுத்தது. 

தனது கஜானாவை நிரப்பவே டக்ளஸ் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சராக உள்ளார் | Jaffna Press Meet N V Subramaniam Douglas

பணிப்பாளர் அங்கீகாரம் பெற்றவர்கள் அமைச்சரினால் அடையாளப்படுத்தபட்ட இடத்தில் மாத்திரம் தொழில் மேற்கொள்ளல் என்பன இதன்மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வெளிநாட்டு கடற்றொழிலாளர்களையும் இதன்மூலம் தொழிலுக்குள் அனுமதிக்கலாம். ஆகவே இதனை விடுத்து ஏற்கனவே 1996 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை திருத்தி 2017 ஆம் ஆண்டு இழுவைமடிச் சட்டத்தையும் உள்ளீர்த்து கடற்றொழிலாளர் நலனை பேணும் ஆக்கபூர்வமான சட்டமாக இதனை மாற்றவேண்டும்.

மேலும் தற்பொழுது இந்தியாவிற்கு பேச்சுவார்த்தை மேற்கொள்ள செல்வதற்காக உண்டியலில் சிலர் பணம் திரட்டுகின்றனர் இதன் இரண்டு விதமாக பார்க்கலாம் கடற்றொழிலாளர்கள் பிச்சையெடுக்கின்றார்கள் ,பிச்சையெடுத்துதான் இந்தியாவிற்கு பேச்சுவார்த்தைக்கு சொல்லுகின்றார்கள் எனவும் கூறலாம்.

அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையை நடாத்தியிருந்து. இதன்மூலம் இணக்கப்பாட்டினையும் எட்டியிருந்தது.இருப்பினும் தற்பொழுது அரசியல் இலாபத்திற்காக தொடர்ந்து இவ்வாறான பேச்சுவார்த்தை மாயவலைகளை உருவாக்குவதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.

 

புலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு நடந்த அநீதி: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

புலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு நடந்த அநீதி: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

  

தான்தோன்றிதனமான செயற்பாடு

கடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக தான்தோன்றிதனமாக செயற்படுகின்றார். அனைவரும் ஏற்றுகொள்ள கூடிய வகையில் இவர் செயற்படவில்லை .இந்த பேச்சுவார்த்தை கடற்றொழில் அமைச்சரின் கபட நாடகமே இந்த பேச்சுவார்தையாகும்.

அணையில் இந்திய கடற்றொழிலாளர்கள் தாக்கபட்டிருந்தார்கள். இந்திய துணைத்தூதரகம் சில கிராமங்களை இதில் ஈடுபட்டுள்ளார்கள் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் சுட்டிகாட்டுவதாக தெரிவித்தனர்.

இதனை வைத்து பார்க்கும் பொழுது மாபெரும் சக்தி ஒன்று இதன் பின்னால் செயற்பட்டுள்ளது .இதன் மூலம் இந்தியாவில் போராட்டம் வெடித்துள்ளது யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்ருக்கு எமது மனவருத்தத்தை தெரிவிக்கின்றோம்.

இஸ்ரேலின் அடுத்த கொடூரத் தாக்குதல் : பலர் மரணம் - வடகொரிய ஆயுதங்களை பயன்படுத்தியதா ஹமாஸ்

இஸ்ரேலின் அடுத்த கொடூரத் தாக்குதல் : பலர் மரணம் - வடகொரிய ஆயுதங்களை பயன்படுத்தியதா ஹமாஸ்


மகிந்த காலத்தில் கடலோர கிராம கடற்றொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு சீன நிறுவனத்திற்கு கடல் வளங்கள் பகிரப்பட்டது இதற்கு மகிந்தவுடன் ஒட்டிக்கொண்டிருந்த தமிழ் அமைச்சரும் கையூட்டு பெற்றதாக அறியமுடிந்தது இன்றும் மொட்டு ரணில் கூட்டணியிலும் அவ்வாறே இடம்பெறுகின்றது. அரசுடன் ஒட்டியிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவினை அரசினால் வெளியேற்ற முடியவில்லை. தொல்பொருள் சரணாயலயம் என பல்வேறு காரணங்களை கூறி கடற்றொழிலாளர்களை அந்நியபடுத்துகின்ற செயல் இருந்தது .

கடற்றொழில் 

கடற்றொழிலாளர்களை கடற்றொழிலை தொழிலை மாற்றவைத்து கடல் வளத்தை கைப்பற்றி பண்ணையை மேம்படுத்தும் திட்டங்களை டக்ளஸ் முன்னெடுத்துள்ளார். தனது பினாமிகளை வைத்து இந்த தொழிலை முன்னெடுத்து தனது கஜானாவையும் நிரப்பி தனக்கு ஆதரவாக ஆட்களை திரட்டுகின்றார் இந்திய இழுவைமடி பிரச்சினையை தீரவிடாது டக்ளஸ் வைத்திருப்பதன் நோக்கமும் இதுதான் இலங்கை இந்திய பிரச்சனையை பெருக்கி ஈழ மக்கள் கடற்றொழிலை கைவியவைப்பதே இவரது நோக்கமாக இருக்கின்றது .

தனது கஜானாவை நிரப்பவே டக்ளஸ் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சராக உள்ளார் | Jaffna Press Meet N V Subramaniam Douglas

பெரும்பாண்மை கட்சியின் பிரதமர் இந்தியாவில் கூறுகிறார் இந்திய கடற்றொழிலாளர்களை கடற்றொழிலில் அனுமதிப்பேன் என்று ஆனால் அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தான் விடமாட்டேன் என்கிறார்.அமைச்சர் காலத்துக்கு காலம் தனது கருத்தை மாற்றுவார் நாம் அவதானமாக இருக்கவேண்டும்.

தற்பொழுது கடற்றொழிலாளர் பொருளாதார வலயமும் அந்நிய சக்திகளை நாட்டிற்குள் ஊடுருவதையே அடிப்படையாக கொண்டமைந்துள்ளது. எனவே வடபுலத்து கடற்றொழிலாளர்கள் நாம் எமது கடல் வளம் பறிபோகும் சந்தர்பத்தில் அதற்கு எதிராக நிச்சயமாக கிளர்ந்து எழுவோம்.” என தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடுவில் கால்நடைகள் மீது தொடரும் துப்பாக்கிச்சூடு: மூன்று நாட்களில் 3 மாடுகள் கொலை

மயிலத்தமடுவில் கால்நடைகள் மீது தொடரும் துப்பாக்கிச்சூடு: மூன்று நாட்களில் 3 மாடுகள் கொலை

4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US