புலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு நடந்த அநீதி: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka Grade 05 Scholarship examination Education
By Bavan Oct 19, 2023 03:12 PM GMT
Report

மட்டக்களப்பில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் போது அங்கு கடமையாற்றிய சகோதர இனத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பிழையாக வினாக்களை தெரிவித்ததுடன் வலுகட்டாயமாக அந்த வினாக்களை சில மாணவர்களின் வினாத்தாளில் உள்ளீடு செய்து பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது, எனவே அநீதிக்கு நீதிவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு - கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.10.2023) திகதி 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது.

இதில் 20 மாணவர்கள் கொண்ட ஒரு பரீட்சை மண்டபத்தில் வேறு பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பரீட்சை கடமையை பொறுப்பேற்று கடமையாற்றி வந்த நிலையில் அவர் அங்குள்ள மாணவர்களிடம் யார் அதிக புள்ளிகளை எடுப்பவர் என வினாவியுள்ளார்.

இஸ்ரேலின் அடுத்த கொடூரத் தாக்குதல் : பலர் மரணம் - வடகொரிய ஆயுதங்களை பயன்படுத்தியதா ஹமாஸ்

இஸ்ரேலின் அடுத்த கொடூரத் தாக்குதல் : பலர் மரணம் - வடகொரிய ஆயுதங்களை பயன்படுத்தியதா ஹமாஸ்


பரீட்சை தோற்றிய மாணவர்கள்

இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு உதவுவது போல பரீட்சை வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு விடை தெரிவிப்பதாக பிழையான விடைகளை தெரிவித்ததுடன் சுமார் 8 மாணவர்களின் வினாத்தாளில் அவர்கள் கோடிட்ட விடைகள் பிழையென தெரிவித்து அந்த வினாத்தாள்களில் ஆசிரியர் வலுக் கட்டாயமாக தனது கையால் பிழையான விடைகளுக்கு கோடிட்டுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு நடந்த அநீதி: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை | Students In The 5Th Grade Scholarship Examination

அதனை தொடர்ந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மனக்குழப்பமடைந்த நிலையில் பரீட்சை நேரம் முடிவடைந்து வினாத்தாள்கள் பெறப்பட்டுள்ளன. இதன் பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவர்கள் தமது பெற்றோருக்கு தாங்கள் பரீட்சை வினாத்தாளில் கேட்ட கேள்ளிகளுக்கு சரியாக விடைகளையளித்த நிலையில் அங்கு கடமைக்கு வந்த ஆசிரியர் பிழையாக விடைகளை தெரிவித்ததாக தங்களுக்கு நடந்த அநீதியை தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து நேற்று புதன்கிழமை (18.10.2023) பாடசாலை அதிபர் அந்த மண்டபத்தில் பரீட்சைக்கு தோற்றிய 20 மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து விசாரணையின் பின்னர் இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் மேலதிகாரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும் இந்த பிரச்சனைக்கு ஒருவார கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களின் கோரிக்கை

எனவே இந்த சம்பவம் இடம்பெற்ற 3 தினங்கள் ஆகிய நிலையில் இந்த பிள்ளைகளுக்கு இடம்பெற்ற அநீதியை சில அதிகாரிகள் மூடி மறைக்க செயற்படுவதாக நினைக்கின்றோம்.

புலமைப்பரிசில் பரீட்சை மண்டபத்தில் மாணவர்களுக்கு நடந்த அநீதி: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை | Students In The 5Th Grade Scholarship Examination

எமது பிள்ளைகளை நாங்கள் இரவு பகலாக கண்விழித்து அதிக பணத்தை விரயம் செய்து பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி கற்பித்து வந்த நிலையில் இவ்வாறான ஆசிரியரின் செயற்பாட்டால் எமது பிள்ளைகளின் கல்வி எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே எமது பிள்ளைகளான மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிவேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும் அதேவேளை இவ்வாறான ஆசிரியருக்கு தகுந்த தண்டனை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

you may like this,


பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் (Video)

பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் (Video)

நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும்: கைதி ஒருவரின் பரபரப்பு தகவல் - நீதி அமைச்சர் விளக்கம்

நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும்: கைதி ஒருவரின் பரபரப்பு தகவல் - நீதி அமைச்சர் விளக்கம்

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US