வடக்கில் 1600 முன்பள்ளிகளில் ஒரே நாளில் சத்துணவு திட்டம் ஆரம்பம்! உலக வங்கி அனுசரணை (Photos)
வட மாகாணத்தில் உள்ள சுமார் 1600 முன்பள்ளிகளில் மூன்று மாத காலத்திற்கு இலவச சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி ஒன்றில் இன்று (2.05.2023) இதற்கான செயல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முன்பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியம்
முன்பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெறும் நோக்குடன் சத்தான உணவை வழங்கும் நோக்குடன் வடமாகாணத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட முன்பள்ளில் குறித்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
உலக வங்கி
உலக வங்கியின் நிதி அனுசரணையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் உள்ளூராட்சி அமைச்சு, வட மாகாண கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து குறித்த செயற்திட்டத்தினை வழி நடத்துகின்றன.
இந்நிகழ்வில் பிரதம செயலாளர் அலுவலக பிரதிநிதி நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ஜெலீபன், நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வடமாகாண ஆரம்ப பிரிவு உதவி கல்விப் பணிப்பாளர் சற்குண ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
போசாக்கு துணை உணவு வழங்கும் செயற்றிட்டம் - 2023
பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களிற்கு உள்ளுராட்சி மன்றங்களின் பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் போசாக்கு துணை உணவு வழங்கும் செயற்றிட்டம் - 2023ன் கீழ் போசாக்கு துணை உணவு வழங்கும் நிகழ்வு (02.05.2023)ம் திகதி பெரியதேவனத்தாய் முன்பள்ளியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் அருணகிரி வினோராஜ் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சம நேரத்தில் பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட 26 முன்பள்ளிகளிலும் இந்நிகழ்வு இடம்பெற்று 526 முன்பள்ளி மாணவர்களிற்கு சத்துணவு வழங்கப்பட்டது.
செய்தி: எரிமலை
![Gallery](https://cdn.ibcstack.com/article/8448c357-a920-4512-a005-6d643e351264/23-645155061378d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/34f394f6-a42a-4f33-bdfa-23da65bc9c0c/23-64517cc8d9e5b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/34ec51ef-fab0-4f59-ba63-deb373c1ce87/23-64517cc973faa.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f567ba5e-8bd5-40c0-96c6-dfbfe09f178b/23-64517cc9d7f4b.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a73e643a-c1ab-4fde-bf7a-60ba1b16789d/23-64517cca3fb31.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d48bfc8e-14c1-4204-8655-f849fb2853a2/23-64517cca9711c.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e7334428-da84-45de-b0b9-6f7267f2deb0/23-64517ccaf0a2e.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 5 நாட்கள் முன்
![விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. யாரு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/ce301a4b-2883-4c9b-ae52-8715313c2c0d/25-67aef65734dc0-sm.webp)
விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. யாரு தெரியுமா? Cineulagam
![chanakya topic: இந்த நபர்கள் வாழ்க்கை முழுவதும் நிம்மதியிழந்து தவிப்பார்கள்... ஏன்னு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/9140d493-83f9-45f6-88a1-2e0d4577ddab/25-67aeddcdb1319-sm.webp)
chanakya topic: இந்த நபர்கள் வாழ்க்கை முழுவதும் நிம்மதியிழந்து தவிப்பார்கள்... ஏன்னு தெரியுமா? Manithan
![444 நாட்கள் மற்றும் 400 நாட்கள் கொண்ட SBI FD.., ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் எதில் அதிக லாபம் கிடைக்கும்?](https://cdn.ibcstack.com/article/b79a7323-e482-49d7-8a0b-51209b27dd3b/25-67af149b9ae75-sm.webp)