வடமாகாண ஆளுநாின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்
வடமாகாண ஆளுநாின் செயலாளராக நிா்வாக சேவை விசேட தரத்தைச் சோ்ந்த இளமதி சபாலிங்கம் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநாின் செயலாளராக நேற்றுமுன் தினம் (28.01.2022) ஆளுநாின் கொழும்பு அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
மும்மொழிப் புலமைவாய்ந்த இளமதி சபாலிங்கம் அரச நிா்வாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சு, தபால் சேவைகள் அமைச்சு மற்றும் வேறு அமைச்சுக்களில் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
மேற்படி ஆளுநாின் செயலாளா் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமாகாண ஆளுநாின் யாழ். அலுவலகத்திற்கு உதவிச்செயலாளர் ஒருவரும்
வடக்கு மாகாண பிரதம செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநாின் அலுவலக
செய்திகள் தொிவிக்கின்றன.





கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
