யாழ். நெடுந்தீவில் பதிவான கொடூரம்: சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்ட ஆயுதம்
யாழ். நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த ஆடை என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரை 2 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்று (23.04.2023) அனுமதியளித்திருந்தது.
அதனடிப்படையில் சந்தேகநபர் இன்று (24.04.2023) நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேகநபர் அணிந்திருந்த ஆடை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையில் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு
நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 பவுண்
தங்கநகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam