நாவலர் மண்டப விவகாரம் - ரிட் மனுத்தாக்கல் செய்ய இந்து கலாச்சார திணைக்களம் நடவடிக்கை
நாவலர் மண்டபத்தில் இருந்து யாழ். மாநகர சபை வெளியேறுவதற்கு யாழ். மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் இந்து கலாச்சார திணைக்களம் "ரிட்" மனுத் தாக்கல் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ். மாநகர சபையை நாவலர் மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்த நிலையில் அதனை எதிர்த்து யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜா பார்த்தீபனால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவு
குறித்த வழக்கு நேற்றைய தினம் (04.04.2023) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மன்று யாழ்.மாநகர சபையை நாவலர் மண்டபத்தில் இருந்து வெளியேறும் ஆளுநரின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது.
நாவலர் மண்டபத்தின் உரிமம் தங்களுக்கு தான் உரியது என இந்து கலாச்சாரத்
திணைக்களம் ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில் எதிர்வரும் வாரங்களில் நீதிமன்றக் கட்டளைக்கு இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ரிட் மனு தாக்கல்
செய்யவுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
