யாழ் நாவலர் கலாசார மண்டப விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ். மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேறப் பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இடைக்கால கட்டளை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் (04.04.2023) யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
யாழ். மேல்நீதிமன்றம்
வடக்கு மாகாண ஆளுநர் யாழ். மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன், அதனைப் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளித்துள்ளது.
இதற்கு எதிராக யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ.பார்த்தீபன் தாக்கல் செய்த வழக்கில் யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் முன்னிலையாகி இருந்தபோதே யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் இந்த இடைக்காலக் கட்டளையைப் பிறப்பித்துள்ளது.
மேலும், குறித்த வழக்கு ஏப்ரல் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
