யாழ் கோவிலொன்றில் தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டுள்ளதா..!
யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் பகுதியிலுள்ள நல்லிணக்கபுரம் எனும் இடத்தில் கோயிலையும் மக்கள் குடியிருப்பையும் பிரித்து தீண்டாமை சுவரொன்று கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தை சுற்றி ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள் இருப்பதாகவும், இவர்களிடமிருந்து பிரிக்கும் நோக்கிலேயே இந்த சுவர் எழுப்பப்ட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஆலயத்தை பாதுகாக்கும் நோக்கில் கட்டப்படும் மதிலை விட ஆலயம் வெளியில் தெரியாத வகையில் மதில் கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் நம்பும் விடயம்
ஆலயத்தின் முன் பகுதியே இவ்வாறு மறைக்கப்பட்டு மதில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தற்போது தாம் பல துன்பங்களையும் நோய்களையும் அனுபவிப்பதாக நம்புவதாகவும் ஆலயத்தை அண்டியுள்ள பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மற்றொரு தரப்பினர் இந்த மதில் சுவரானது தீண்டாமை நோக்கத்திற்காக கட்டப்பட்டது அல்ல எனவும், ஆலயத்தை பாதுகாக்கும் நோக்கில் கட்டப்பட்ட மதில் எனவும் குறிப்பிடுகின்றனர்.
பல வருடங்களாக யுத்தத்தில் அவதியுற்று பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து தற்போது அனைத்து மக்களுக்கு ஓர் வாழ்க்கையை தமக்கென அமைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் தாற்றபோதும் கூட யாழில் சிலர் இவ்வாறு தீண்டாமை மற்றும் சாதியை மையப்படுத்தி மக்களை பிரித்துப்பார்ப்பது மற்றுமொரு அழிவிற்கு வழிவகுக்கும் என பிரதேசவாசி ஒருவர் ஆதங்கப்பட்டுள்ளார்.





ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
