தீவக நுழைவாயில் அம்மனின் சிலை விவகாரம்! அனைத்து சட்டத்தரணிகளுக்கும் சரவணபவன் விடுத்துள்ள அழைப்பு (video)
அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (18.04.2024) நீதிமன்றத்தில் முன்னிலையாக வாருங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார்.
தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாக பூசணி அம்மனின் சிலை தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் நீதிமன்றத்தில் இடம்பெற உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒற்றுமையாக நீதிமன்றத்திற்கு சமூகம் அளியுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார்.
அழைப்பு
அதேபோல அனைத்து சட்டத்தரணிகளும் எமக்காக இன்று நீதிமன்றத்தில் முன் வாருங்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
