யாழ்.உரும்பிராயில் இடம்பெ்ற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உடும்பிராயில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பொன்.சிவகுமாரின் சிலைக்கு மாலை அணிவித்து முள்ளிவாய்க்கால் நினைவாக பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பொதுமக்களில் 100 பேருக்கு அரிசிப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரிமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





