விலை போகாதவரே யாழ். மேயராக வரவேண்டும்! முன்னாள் மேயர் மணி வலியுறுத்து
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக வரக் கூடியவர் விலை போகாதவராக இருக்க வேண்டும் என யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(8) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ். மாநகர சபை மேயர் பதவி என்பது மிக முக்கியமானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட முக்கியமானது.
அபிவிருத்தித் திட்டங்கள்
நாடாளுமன்ற உறுப்பினரை விட சிறப்பாகச் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் இராஜதந்திரிகள் யாழ். மேயரை நிச்சயம் சந்திப்பார்கள். அவ்வாறானவர்களுடன் இராஜதந்திர ரீதியாக உரையாட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள், தமிழ் மக்களின் அபிலாஷைகள், அவர்களின் பிரச்சினைகள் என்பவற்றை எடுத்துக் கூற வேண்டும்.
எனவே, மேயராக தமது கட்சி சார்பாக முன்னிலைப்படுத்தப்படுவர் சிறப்பானவராக இருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் பொறுப்புடன் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் மேயரைத் தெரிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |