முதல் தடவையாக விசாரணைக் குழு தேசபந்து தென்னக்கோனுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை விசாரணைக் குழுவின் முன் முன்னிலையாகுமாறு முதல் தடவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் அவரை முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு
இதன்படி, மே மாதம் 19ஆம் திகதி தேசபந்து தென்னக்கோனை முன்னிலையாகுமாறு குறித்த குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இதுவரை பல நாட்கள் கூடியிருந்ததுடன், எதிர்கால விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் தேசபந்து தென்னக்கோனை குழு முன்னிலையில் தேசபந்து தென்னக்கோனை முதல் தடவையாக அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |