யாழ். செம்மணி மனிதப் புதைகுழி! இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அகழ்வு
யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணிகள்
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 36 வது யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ ஏ ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் முதலாவதாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்திலே 09 மனித என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் 164 என்புத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.









ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan