யாழில் தொடருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு
யாழில் தொடருந்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான 69 வயதையுடைய மாணிக்கம் விஜயரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தச்சன்தோப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து கடந்த (08.10.2023) ஆம் திகதி இரவு தொடருந்தில் ஏறிய போது தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
இதனையடுத்து உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் (12.10.2023) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை
அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு
உத்தரவிட்டுள்ளார்.





குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
