மீண்டும் கைவிடப்பட்டுள்ள யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையம்
நீண்டகால இழுபறிக்கு பின்னர் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் கடந்த செவ்வாய்க்கிழமை நான்காவது தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, தனியார் பேருந்து சங்கத்தினர் மாத்திரமே அங்கிருந்து தமது சேவைகளை ஆரம்பித்தனர்.
நீண்ட இழுபறி
இருப்பினும், இலங்கை போக்குவரத்து சபையினர், "எமக்கு என்று ஒரு பேருந்து நிலையம் இருக்கும் போது, நாம் வேறு எங்கிருந்தும் சேவைகளை ஆரம்பிக்க மாட்டோம்" என கூறி புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தர மறுத்துள்ளனர்.

அந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிக்காத இ.போ.ச வினருக்கு எதிராக வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் பணிப்பில், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர், யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையே முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இ.போ.ச வின் யாழ்ப்பாண சாலை முகாமையாளரை அழைத்து வாக்கு மூலம் பெற்ற போதும் "எமக்கான பேருந்து நிலையம் இருக்கும் போது, நாம் வேறு இடங்களில் இருந்து சேவைகளை முன்னெடுக்க மாட்டோம்" என உறுதியாக கூறி இருந்தார்.
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri