ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை விவகாரம்! யாழினை சேர்ந்த நபர் பிரித்தானியாவில் கைது
யாழ்.ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் North Hampton shire பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகநபர் தொடர்பான விபரம்
பிரித்தானிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய யாப்பாணத்தை சேர்ந்த சந்தேகநபர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்.ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலைச்சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பியைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரை கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பின்னர் 6 பேரும் குற்றமற்றோர் என நீதிமன்றம் விடுதலை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
