யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறிய அமைச்சருக்கு சுமந்திரன் பதிலடி
ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை என்றார் மேற்படி நபர். சரி அவருக்கு கணக்குத்தான் தெரியாது என்றால் புவியியலும் தெரியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராகத் தாக்கல் செய்த...
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் எங்கள் இருப்பின் அடையாளம், தமிழ் மக்களின் கலாசார அடையாளம். இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளவர்களைப் பற்றி பலவிதமான கேலியான விடயங்கள் உலா வருகின்றன.
கல்விக்குப் பெயர்போன கல்விச் சமூகம் செறிந்த இந்த மண்ணிலே இருந்து இவர்கள் எப்படி பிரதிநிதிகளாகப் போனார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
இந்த ரவுடி அமைச்சர் சொல்லுகின்றார் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வேட்டி கட்டுறார், கொழும்பில் கால் சட்டை போடுகின்றார் என்கின்றார். நான் என்ன ஆடையில் இருந்தாலும் உங்களுக்கு என்ன ஐயா வருத்தம். எனக்கு வழக்குத் தாக்கல் செய்யத்தானே தெரியும் என்கின்றார் அவர். ஆம் எனக்கு வழக்குத் தாக்கல் செய்யத் தெரியும்.
உங்களுடைய கட்சி இதுவரைக்கும் ஊழலுக்கு எதிராகத் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளிலும் என்னைத்தான் சட்டத்தரணியாக நியமித்திருக்கின்றார்கள்.
உங்களுக்கு அது தெரியுமோ தெரியாது. உங்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. உங்களது கட்சித் தலைவர்களிடம் கேளுங்கள் ஊழலுக்கு எதிரான வழக்குகளில் ஏன் சுமந்திரனைச் சட்டத்தரணியாக நியமித்துள்ளீர்கள் எனக் கேளுங்கள்.
நான்கு மாதங்கள் கடந்து விட்டன
ஊழலுக்கு எதிரானவர்களாக உங்களைக் காட்டிக்கொண்ட நீங்கள் இன்று செய்கின்ற ஊழல் மிக மோசமான ஊழல்.
ஒருவரைச் சபாநாயகராக நியமித்தீர்கள். அவர் தன்னைக் கலாநிதி என்று சொல்லிக்கொண்டார். அதைக் கேள்வி கேட்டவுடன், "கலாநிதி சான்றிதழை தவற விட்டுவிட்டேன். எனது பல்கலைக்கழகத்தில் இருந்து எடுக்க வேண்டும். அதுவரை பதவி விலகுகின்றேன்." என்றார்.
இது நடந்தது டிசம்பர் மாதம். நான்கு மாதங்கள் கடந்து விட்டன. இன்னமும் கலாநிதிப் பட்டம் வரவில்லை இது ஊழல் இல்லையா?
நீங்கள் உங்களது 159 பேரில் தெரிந்து எடுத்து நாட்டின் 3 ஆவது பிரஜையாக நியமிப்பதற்கு தெரிந்தெடுத்த நபர் கையும் களவுமாக பிடிபட்ட பிறகு அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும்.
உங்கள் கட்சி அவரைக் கட்சியில் இருந்தே துரத்தியிருக்க வேண்டும். ஏன் இன்னும் செய்யவில்லை? மக்களை முட்டாள் ஆக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
