யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம் (video)
யாழில் 13 ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
''வடக்கில் நுழைவாயில்'' என்னும் தொனிப் பொருளில் இன்று (03.03.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.
குறித்த கண்காட்சியில் தென்னிலங்கை உற்பத்தியாளர்களின் காட்சிக் கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் உள்ளூர் உற்பத்திக் கூடக்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ். இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெபாஸ்கரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் , யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்ப்பாண தொழில்துறை மன்ற தலைவர் விக்னேஷ் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan