யாழில் ஆரம்பமான சர்வதேச போட்டியாளர்களை உள்ளீர்க்கும் சதுரங்க களம்!
இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் யாழ். சர்வதேச சதுரங்க போட்டி(Jaffna-International-Chess-Tournament) இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி இன்று(30.11.2024) முதல் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி வரை கொக்குவிலில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் சுமார் 750 க்கு மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கு பற்றவுள்ளனர்.
இந்தியா, பிரித்தானியா,
இந்தியா, பிரித்தானியா, மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இப்போட்டியில் சுமார் 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது 150 மேற்பட்ட வீரர்களுக்கு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியானது யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற இரண்டாவது சர்வதேச சதுரங்க போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |