கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சந்தேகநபர்கள் செய்த மோசமான செயல்
யாழ். பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியொன்றில் கணவனை கத்தி முனையில் அச்சுறுத்தி மனைவியை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த அதிர்ச்சி மிக்க சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 23ம் திகதி கணவன், மனைவி, குழந்தை மூவரும் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் மூவர் நுழைந்துள்ளனர்.
ஒருவர் வீட்டின் வாசலில் நிற்க மற்றவர் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார்.
இதன்போது இன்னொருவர் மனைவியை வன்புணர்விற்குற்படுத்த முயற்சித்துள்ளார்.
மூவரில் இருவர் கைது
இருப்பினும் அவர்கள் எழுப்பிய சத்தத்தில் சந்தேகநபர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்களை அடையாளப்படுத்தியதைத் தொடர்ந்து நேற்றையதினம் பொலிஸார் அவர்களில் இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதித்தார்.
மூன்றாவது சந்தேகநபர் இன்றையதினம் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் மீது இது போன்ற முறைப்பாடுகள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு
இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
