யாழ். பருத்தித்துறை நகரசபையால் மின்னியல் நூலகம் திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகர சபையால் மின்னியல் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிக்ழ்வானது இன்று காலை 11 மணியளவில் தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த தர்மரட்ணவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அங்கத்துவ அட்டைகள்
பருத்தித்துறை நகரசபை செயலாளர் தாரணி தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சிறுவர் மின்னியல் நூலகம், உட்பட மூன்று மின்னியல் நூலக தொகுதிகளும் நிகழ்வின் பிரதம விருந்தினர் தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் நந்த தர்மரட்ணவால் முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர்கள், அதிகாரிகளுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து மின்னியல் நூலக அங்கத்தவர்களுக்கான இலவச அங்கத்துவ அட்டைகள் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை தலைவர் பேராசிரியர் நந்த
தர்மரட்ண, தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை பணிப்பாளர் w.சுனில்,
தேசிய நூலகங்கள் மற்றும் ஆவண சேவைகள் சபை அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட
உள்ளூராட்சி உதவி ஆணையாளர் P.சிறிவரன் மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள், பருத்தித்துறை நகரசபை உத்தியோகஸ்தர்கள், மின்னியல் நூலகத்தில் பயிற்சி பெற்ற
அயல் பாடசாலைகளின் மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.