யாழில் அரச அதிகாரிகள் என்ற போர்வையில் மாணவர்களிடம் பணம் சேகரிப்பு - கல்லூரி நிர்வாகத்தின் அறிவுறுத்தல்
யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களிடம் வட்ஸ்அப்பில் பணம் பறிக்க முற்படுவதாக கூறி, சர்ச்சையொன்று கிளம்பியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த தொழில்நுட்பக் கல்லூரியில் எதிர்வரும் 12- 13-ம் திகதிகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கான வாய்மொழி மூல பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
இதற்காக கொழும்பிலிருந்து வருகை தரும் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்காக குறித்த நிதி சேகரிப்பு விரிவுரையாளர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இடம்பெறுவதாக மாணவர் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பணம் சேகரிப்பு மோசடி
பரீட்சை நடத்துவதற்கு வரும் உத்தியோத்தர்களுக்கு அரசாங்கம் தங்குமிடம் போக்குவரத்து என்பவற்றை வழங்குகின்ற போதும், மாணவர்களிடம் பணத்தை கேட்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வியெழுப்பியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில், தொழிட்நுட்பக் கல்லூரியில் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறான விடயம் ஒன்று whatsapp ஊடாக இடம்பெறுவதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும் மாணவர்கள் நிதி வழங்க வேண்டிய தேவை இல்லை என்றும் அறிவுறுத்தல் வழங்கியதாக தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வட்ஸ்அப்பில் நடக்கும் பண சேகரிப்பு தொடர்பில் பிரதமர் ஹரிணி அமர சூரியவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri