கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் யாழ். மாவட்ட வைத்திய அதிகாரிகள் (Video)
யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை
ஆகியவற்றின் வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டமானது இன்று ( 20.09.2023) மற்றும் நாளை (21.09.203)ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதையும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதையும் நோக்காகக் கொண்டு இந்த போராட்டமானது நடைபெறவுள்ளது.
அரசின் மெத்தன போக்கு
மேலும் தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வட மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் 12 ஆம் திகதி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று 20 ஆம் திகதி ஆதார வைத்தியசாலைகள் சாவகச்சேரி மற்றும் தெல்லிப்பளை ஆகியவற்றில் நண்பகல் 11.30 மணியிலிருந்து 1 மணி வரையிலும், நாளை 21ம் திகதி நண்பகல் 11.30 மணியிலிருந்து 1 மணி வரையில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை
சுகாதாரத்துறையில் நிலவிவரும் நெருக்கடிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாதத்துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வை காண வலியுறுத்தி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (20) புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
