உயர்தரத்தில் 3A சித்திகளை பெற்ற யாழ் இந்துக்கல்லூரி மாணவன் திடீர் மரணம்
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக jதிடீரென உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - இணுவிலைச் சேர்ந்த 19 வயதான லவன் அக்சயன் என்பவரே இன்று (04.04.2026) காலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெரும் துயரத்தில் உறவினர்கள்
குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கல்வி கற்று, கணிதப்பிரிவில் 2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

அதனடிப்படையில் அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 3 A சித்திகள் பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடத்தை பிடித்து சாதித்திருந்தார்.
இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவனின் மரணம் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்! விமானியை பிடித்தால் பரிசு - நேரடி மோதல் வெடிக்கும் அபாயம்
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 20 மணி நேரம் முன்
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam