யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்த ஹரீன் பெர்ணான்டோ
யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கும்(Harin Fernando) இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடாலானது நேற்று(12.07.2024) யாழ் மாவட்ட பலாலி வீதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
வேலைத் திட்டங்கள்
இதன் போது தற்போதுள்ள அரசியல் நிலவரங்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் யாழ் மாவட்டம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் தொகுதி அமைப்பாளர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |