யாழில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது - ஐவர் தப்பியோட்டம்!
யாழ்ப்பாணம் - பொன்னாலை காட்டு பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(14) இடம்பெற்றுள்ளது.
ஐவர் தப்பியோட்டம்
நேற்றையதினம் அத்துடன் 5 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டன.

இதன்போது மாதகல் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு 293 கிலோ 497 கிராம் எடையுடைய கேரள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால வழிகாட்டலின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri