யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய சன சமூக நிலையத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்
யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய சன சமூக நிலையத்தில், விசேட வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் நேற்றையதினம் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது.
அச்சுவேலி மத்திய சன சமூக நிலையத்தில் இலவச மருத்துவ முகாம் யாழ்ப்பாணம் மருத்துவ சங்கம், யாழ்ப்பாண மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் மற்றும் அச்சுவேலி மத்திய சன சமூக நிலைய ஏற்பாட்டில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற மருத்துவ முகாமில் வைத்திய ஆலோசகர்கள் குழந்தை மருத்துவ நிபுணர்கள், கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள், தோல் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர்.
இலவச மருத்துவ முகாம்
இதில் நோயர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதுடன், பரிந்துரைக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
விசேடமான இன்றை மருத்துவமுகாமில் அச்சுவேலியை சேர்ந்து விசேட மருத்துவர்கள் கலந்துகொண்டு தமது கிராம மக்களுக்க சேவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.












தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri