யாழில் தொடரும் கடற்றொழிலாளர் போராட்டம்: மோசமாகியுள்ள ஒருவரின் உடல்நிலை
புதிய இணைப்பு
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமிறலைக் கண்டித்து உணவு தவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். குடாப்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாட்டை நிறுத்துமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை நால்வர் யாழ். இந்திய துணை தூதரகத்திற்குச் முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் உடல் சோர்வடைந்ததையடுத்து குறித்த இடத்துக்கு வைத்தியர் வரவழைக்கப்பட்டு உடல்நிலை தொடர்பில் பரிசோதிக்கப்பட்டது.
இதன்போது, பரிசோதித்த வைத்தியர் குறித்தகடற்றொழிலாளர்களின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதனால் சோர்வு ஏற்படுகிற நிலையில் நீரை அதிகளவு அருந்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி - கஜி
முதலாம் இணைப்பு
யாழில் நான்கு இந்திய கடற்றொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அதில் ஒருவரின் உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களது, அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கையை கண்டித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (21.03.2024) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
இதில் ஒரு கடற்றொழிலாளரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.
போராட்டகாரர்கள் கவலை
அத்துடன், குறித்த கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் யாழ். தையிட்டி அன்னை வேளாங்கணி கடற்றொழில் சங்கத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.
அதேவேளை, இந்த நிமிடம் வரை அமைச்சரோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ போராட்டத்திற்கு ஆரதவு தரவில்லை என்பது மிக வேதனையாக உள்ளது என போராட்டக்காரர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |