இலங்கை கடற்படையினரால் 31 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 31பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (20.03.2024) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 25 கடற்றொழிலாளர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு கடற்றொழிலாளர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை - மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
பின்னர் யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 20 நிமிடங்கள் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
