நீதி அமைச்சின் அறிவிப்பால் மகிந்த உட்பட பலர் கலக்கத்தில்..
சிறைச்சாலைகளிலுள்ள அதிக நெருக்கடிக்கு மாற்றுத் தீர்வாக சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் (House Arrest) வைப்பதற்கான புதிய சட்ட மூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்பட்ட, வரைவு சட்ட மூலத்தைச் பரிசீலிக்கும் யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான மேலும் சில புதிய விதிகளை உள்ளடக்கி, வரைவு சட்டமூலத்தை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பல அரசியல்வாதிகள் பயத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...