ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானித்துள்ள யாழ். கடற்றொழிலாளர் அமைப்பு
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக யாழ். கடற்றெழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (18.09.2024) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம் இவ்வாறு அறிவித்துள்ளது.
இதன்போது, "நாட்டினை பொருளாதார ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வளர்ச்சி அடைய செய்துள்ளார். அத்துடன், இந்திய இழுவை மடி படகுகள் பிரச்சினையும் தற்போது 75 வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழ் தேசிய கட்டமைப்பின் பொதுவேட்பாளர் குறித்து எமக்கு எந்தவித உடன்பாடும் இல்லை. 75 வருட காலமாக நாம் போராடி வந்தும் எவ்வித மீட்சியும் கிடைக்காத நிலையில், தமிழ் தேசியத்தை மாத்திரம் முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதில் எமக்கு நம்பிக்கை இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,
தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது இனவாதம் அல்ல: தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் உறுப்பினர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |