இந்திய கடற்றொழிலாளர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் இரும்புப் படகு! யாழில் டக்ளஸ் தெரிவிப்பு(Photos)
இந்திய கடற்றொழிலாளர்களை பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் பாரிய இரும்புப் படகுகள் இரண்டினை கடற்றொழிலாளர்களுக்கு தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் இந்த படகுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களுக்கு எதிராக குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தினர் இன்றையதினம் போராட்டத்தினை முன்னெடுத்து, அமைச்சரின் அலுவலகத்தில் மகஜரினை கைளித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் நான் நன்கு அறிவேன். இந்த பிரச்சினை நீண்ட காலமாக நடைபெறுகிறது. ஆகையால் இதில் நீங்கள் கடற்படையினை மட்டும் நம்பாது நீங்களும் எதிர்க்க வேண்டும்.
அதற்காக பிடிப்பதற்கும் இடிப்பதற்கும் இரண்டு பாரிய படகுகளை நான் தருகிறேன்.
இதன்போது கடற்றொழிலாளர்கள் "படகு வெள்ளோட்டத்திற்கு நீங்கள் வரவேண்டும்" என்றனர். அதற்கு அவர் " நான் ஒன்றினை கூறிவிட்டு பங்கருங்குள் (பதுங்குகுழி) ஒழிந்திருக்க மாட்டேன். நானும் வருவேன் என்றார்.
ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டவர்கள் பதாகைகள் ஏந்தியவாறும் கோஷமிட்டவாறும் பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி: கஜிந்தன்
முதலாம் இணைப்பு
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் கடற்றொழிலாளர்களினால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்று காலை இப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியானது தொடர்ந்து சென்று யாழ். நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத்த தினைக்களத்திலும் அதனைத் தொடர்ந்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் மகஜர்களையும் கையெழுத்துள்ளனர்.













போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
