யாழில் கடற்றொழிலாளர்களிடையே முறுகல் நிலை! தீக்கிரையாகிய உடைமைகள்
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட முறுகலை தொடர்ந்து நேற்று (7) இரவு கரைவலை வாடி ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, செம்பியன்பற்று பகுதியில் உழவியந்திரம் பயன்படுத்தி கரைவலை தொழில் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
உழவியந்திரம்
இந்நிலையில், குறித்த பகுதியில் உழவியந்திரம் பயன்படுத்தி கரைவலை தொழில் செய்து வந்தவர்களை அகற்றும் செயற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்றொழிலாளர்களுக்கு இடையே முறுகல்நிலையும் ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து, (7) நேற்று இரவு செம்பியன்பற்று பகுதியில் உள்ள கரைவலை வாடி ஒன்றுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு இலட்சம் பெறும்படியான கடல் தொழில் உபகரணங்கள் முற்றாக நாசமாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 43 நிமிடங்கள் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
