சட்டரீதியாக வெளிநாடு சென்ற யாழ்.குடும்பம் சிக்கலில்: வெளியான காரணம்

Jaffna Northern Province of Sri Lanka
By Renuka Jun 11, 2023 10:16 PM GMT
Report

இலங்கையிலிருந்து சட்டரீதியாக வெளிநாடு சென்ற குடும்பங்களில் சிலர் பல்வேறு சிக்கலை எதிர் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டரீதியான வெளிநாடு சென்ற ஒரு குடுப்பத்தின் நிலைமையை எடுத்து கூறும் வகையிலும் பிறருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், இலங்கையிலிருந்து ஒரு தமிழ் குடும்பம் லண்டனுக்குச் சட்ட ரீதியாக சென்றுள்ளது. அங்குச் சென்ற பின்னரே, நாம் சட்ட ரீதியாக வந்தாலும் ஒரு பிரச்சினைக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியாக வெளிநாடு சென்ற யாழ்.குடும்பம் சிக்கலில்: வெளியான காரணம் | Jaffna Family With Legal Expatriation

“வெளிநாடு”  என்ற சொல் நிறையப் பேர் விருப்பம் சொல்லாகும். முன்பு சட்டவிரோதமாகவே வெளிநாடு செல்ல வேண்டும். இவ்வாறு போகும்போது பல உயிர் ஆபத்துக்கள் ஏற்படும். இதனால் பலபேரின் குடும்பங்கள் அழிந்துள்ளதாகவும் அறிகின்றோம். 

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் அதிகமான வெளிநாடு செல்கின்றனர். 

அந்த வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வரும் 46 வயதுடைய நபர் ஒருவர்,  தனது மனைவி பிள்ளைகளுடன் வெளிநாடு முடிவெடுத்துள்ளார்.

சட்டரீதியாக வெளிநாடு சென்ற யாழ்.குடும்பம் சிக்கலில்: வெளியான காரணம் | Jaffna Family With Legal Expatriation

இவர் சட்டரீதியான செல்வதற்கான முயற்சியே எடுத்துள்ளார். எவ்வாறாயினும் வெளிநாட்டுப் பயணத்தில் அனுபவம் இல்லாததால் முகவர் ஒருவரை நாடியுள்ளார். வெளிநாடு செல்லவிருந்த நபர் சிறந்த கல்வியாளராக இருந்ததால் கல்வியின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு முடிவெடுத்துள்ளார்.

இந்த நிலையில், “உங்களுக்கு வயது அதிகமாகிவிட்டது. அதனால் தாங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கி வெளிநாடு செல்லுங்கள்” என முகவர் அல்லது நிறுவனத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு ஒப்புக்கொண்ட அவர், வேலை விசாவில் செல்ல முடிவு செய்துள்ளார். அதன் நிமித்தம் ஒரு மாதத்தில் வேலை கிடைத்து விட்டது. 

இதற்காக முகவர்கள் குறித்த நகரிடம் 20 ஆயிரம் பவுண் பெற்றுள்ளனர். (இலங்கை ரூபாவில் சுமார் 72 இலட்சம் ரூபா) அவருக்கு மட்டும் செலவழித்துள்ளார். அதைவிட மனைவி மற்றும் மகளுக்கு 3,000 பவுண் பெற்றுள்ளனர்.

சட்டரீதியாக வெளிநாடு சென்ற யாழ்.குடும்பம் சிக்கலில்: வெளியான காரணம் | Jaffna Family With Legal Expatriation

சரியான பதில் அளிக்கவில்லை

இதனால் தனது உடைமைகளை விற்றுள்ளார். பல வழிகளில் பணத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் டிக்கெட்டுகளுக்காக 8 இலட்சம் ரூபா செலவு செய்துள்ளார். சுமார் 1 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர்.

இவ்வாறு செலவழித்து லண்டனுக்குப் போய் இறங்கியுள்ளனர். பின்னர் அவருக்கு கிடைக்கப்பெற்ற பணியிடத்தை அல்லது நிறுவனத்தைத் தேடிப் போயுள்ளார். இதன்போது அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்று அங்குள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எல்லா விடயமும் சட்ட ரீதியாக நடைபெற்றுள்ளது. அப்படியிருக்க இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, தன்னை அனுப்பிய முகவர்களை தொடர்பு கொண்டு கதைத்தபோது, சரியான பதில் அளிக்கவில்லை.

தனது உடைமைகளை இழந்துள்ள குறித்த நபர், தற்போது பல பொருளாதார சிக்கலிலும் உள்ளார் அத்துடன், உயர் தரம் பரீட்சை எழுதவேண்டிய மகளும் கல்வியை நிறுத்தியுள்ளார்.

எனவே வெளிநாடு செல்வோர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும். விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US