அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை!: யாழில் புனர்வாழ்வு மையம் அமைக்க தீர்மானம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், புனர்வாழ்வு மையம் அமைப்பது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.
உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்னுக்கு 18 - 23 வயதுக்கும் இடைப்பட்ட பல இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர். இதனால் 10 பேர் வரையில் கடந்த 3 மாதங்களுக்குள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
320 பேர் வரையில் சிறைச்சாலையில்
அத்துடன், 320 பேர் வரையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ். போதனா மருத்துவமனையில் 134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதால் யாழ். மாவட்டத்திலேயே புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மருதங்கேணி
மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இதற்கான காணிகளை வழங்க முடியும் என்று யாழ். மாவட்டச் செயலர் க.மகேசன் மேற்படி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
விரைவில் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam