யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிப்பு
மக்கள் நலன் கருதிய அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது, யாழ். மாவட்ட செயலகம் அவற்றைக் கட்டுப்படுத்தி தனது தன்னிச்சையான செயற்பாடுகளைத் திணிக்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்து, மாவட்ட செயலகம் முன்பாக கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் எதிர்பார்ப்புகளையும் அவர்களது விருப்புகளுக்கேற்ப அவசியமானதும் முன்னுரிமையிலானதுமான திட்டங்களை மக்களிடமிருந்து நேரடியாகப் பெற்று அவற்றை செய்து கொடுப்பதே மக்களின் தற்போதைய தேவையாக உள்ளது.
ஆனால் யாழ். மாவட்ட அபிவிருத்திகளைப் பிரதேச ரீதியாக முன்னெடுக்கும்போது ஏற்கனவே அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபங்களை கணக்கில் கொள்ளாது தன்னிச்சையான செயற்பாடுகளில் மாவட்ட செயலகம் ஈடுபட்டுவருவதால் மக்களின் அவசியத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதை மக்கள் பிரதிநிதிகளான எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
குறிப்பாகப் பிரதேச சபையை மையப்படுத்திய அபிவிருத்தி திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் முழுயாக புறக்கணிக்கப்படும் நிலை யாழ் மாவட்டத்தில் மட்டும் காணப்படுகின்றது.
அத்துடன் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவே இருக்க வேண்டும். எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். ஆனால் யாழ். மாவட்டத்தில் மாவட்ட செயலகம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகக் காணப்படுகின்றது.
இவை தொடர்பில் நாம் பிரதேச செயலகங்களில் சுட்டிக்காட்டும்போது அவ் அதிகாரிகள் இவ் உத்தரவுகளை மாவட்ட செயலகமே வழங்குவதாக குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் மாவட்ட செயலகத்தின் தன்னிச்சையான முடிவுகளால் மக்கள் பல அவலங்களை எதிர்கொண்டு வருவதை நாம் நாளாந்தம் காணமுடிகின்றது.
குறிப்பாக அரசாங்கத்தால் வட்டாரத்துக்கு நான்கு மில்லியன் முன்மொழிவுகளை அரியல் இன்றின் வட்டாரத்தின் பொது அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அது யாழ்ப்பாணத்தில் மட்டும் இல்லாத நிலை உள்ளது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் குறித்த திட்டங்கள் நாடு முழுவதும் ஒரே நடைமுறை என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியிருந்த உறுப்பினர்கள், யாழ். மாவட்டத்தில் இவ்வாறான தன்னிச்சையான நடைமுறையை யாழ். மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தியிருந்ததுடன் தமக்கான தீர்வை ஒரு வார காலப்பகுதிக்குள் மாவட்ட செயலகம் வழங்காதுவிடின் யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam