யாழ். மாவட்ட J/17 - 15 ஆவது ஆண்டு பொதுக்கூட்டம்
யாழ். மாவட்ட J/17 - 15ஆவது ஆண்டு பொதுக்கூட்டமானது யாழ். மாவட்ட பகிரங்க ஓய்வூதியங்களின் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் அப்புத்துரை அருந்தவநேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (15.06.2024) யாழ் மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் யாழ். மாவட்ட பகிரங்க ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியம், மாவட்ட நிர்வாக நிதியம் எற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பிரதம அதிதியாக யாழ். பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
புதிய தெரிவுகள்
கடந்த முன்று ஆண்டுகளுக்கு முன்னதாக நாட்டில் எற்பட்ட கோவிட் தொற்று நிலைமை காரணமாக பொதுக்கூட்டங்கள் இடம்பெறாத நிலையில் 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளுக்கான கணக்கறிக்கைகள், வருமான செலவினங்கள் மற்றும் திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது.
மேலும், புதிய அங்கத்தவர்கள், தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் தெரிவுகளும் இடம்பெற்றன.
அதேவேளை, ஓய்வூதியம் பெற்று 87 வயதுக்கு மேற்பட்ட 96 வயதிற்கு உட்பட்டவர்களில் சமூகத்தில் சிறந்த முறையில் சேவையினை ஆற்றிய 13 சிறந்த ஓய்வூதியர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |